/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீரமைக்கப்படாத வைப்பூர் ஏரி கலங்கல்
/
சீரமைக்கப்படாத வைப்பூர் ஏரி கலங்கல்
ADDED : செப் 09, 2024 04:43 AM

ஸ்ரீபெரும்புதுார் : குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரி, அப்பகுதியின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்குகிறது.
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த ஏரியில் கலங்கல் முற்றிலும் சேதமடைந்து சுக்குநுாறாகி உள்ளது.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் மழை பொழியும் போதும், சேதமான கலங்கலின் வழியே ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறி விடுகிறது. இதனால், ஏரியில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது.
தற்போது, தனியார் நிறுவனத்தின் பங்களிப்போடு, ஏரியின் கரையில் உள்ள முட்செடிகள் அகற்றப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது.
இருந்தும் சேதமான கலங்கல் சீரமைக்கப்படவில்லை.
எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏரி கலங்கலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.