/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துர்நாற்றத்துடன் தேங்கும் கழிவுநீர் பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு

ADDED : ஆக 02, 2024 02:31 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு, தனியார் பேருந்து என, 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில், கோயம்பேடு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தின் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக வெளியேறிய கழிவுநீர், துர்நாற்றத்துடன் பேருந்து நிலைய வளாகத்தில் தேங்கி நிற்கிறது.
இதனால், பேருந்து பிடிக்க செல்லும் பயணியர் கழிவுநீரில் நடந்து செல்லும் அவலநிலை ஏற்படுகிறது.
தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
இப்பகுதியில், அடிக்கடி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.