/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சியாளர் நியமிக்க வலியுறுத்தல்
/
காஞ்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சியாளர் நியமிக்க வலியுறுத்தல்
காஞ்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சியாளர் நியமிக்க வலியுறுத்தல்
காஞ்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சியாளர் நியமிக்க வலியுறுத்தல்
ADDED : மார் 04, 2025 07:15 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்குள்ள நீச்சல் விளையாட்டு குளத்தில், நீச்சல் போட்டிகளில் பங்கேற்க உள்ள விளையாட்டு வீரர்களும், வீராங்கானையரும் தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சியாளராக இருந்த ஆனந்த், ஐந்து மாதங்களுக்கு முன், மாவட்ட விளையாட்டு அலுவலராக பதவி உயர்வு பெற்று கோவைக்கு சென்றார். இதனால், காஞ்சிபுரத்தில் நீச்சல் பயிற்சியாளர் பணியிடம், ஐந்து மாதங்களாக காலியாக உள்ளது.
இதனால், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் பயிற்சியில் ஈடுபட புதிதாக வருவோருக்கு பயிற்சி அளிக்க முடியாத சூழல் உள்ளது.
மேலும், நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கும், வீராங்கனையருக்கு முக்கிய ஆலோசனைகளையும், நுணுக்கங்களையும் கற்றுக் கொடுக்க முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில், பள்ளிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்ததும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் துவக்கப்பட உள்ளது.
இருப்பினும், மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சியாளர் பணியிடம் காலியாக உள்ளதால், நடப்பு ஆண்டு கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் துவக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீச்சல் பயிற்சியில் பங்கேற்க சிறுவர்கள் மட்டுமின்றி சிறுமியரும், வளர்இளம்பெண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்திற்கு ஆண் பயிற்சியாளர் மட்டுமின்றி பெண் நீச்சல் பயிற்சியாளரையும் நியமிக்க, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.