/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு ஆபீஸ்களில் காகித கோப்புகள் பயன்பாடு அதிகரிப்பு காஞ்சியில் 'இ- - ஆபீஸ்' திட்டம் முழுவீச்சில் இல்லை அரசு ஆபீஸ்களில் காகித கோப்புகள் பயன்பாடு அதிகரிப்பு

ADDED : மார் 02, 2025 12:29 AM
காஞ்சிபுரம், காகித பயன்பாட்டை குறைக்கவும், விரைவான தகவல் தொடர்பை ஊக்குவிக்கவும், தமிழக அரசு, 'இ - -ஆபீஸ்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அரசு அலுவலகத்தில் கோப்புகள் கையாள்வதில் உள்ள இடர்பாடுகளை களையவும், பொதுமக்களுக்கு கிடைக்கும் சேவைகள் விரைந்து வழங்கப்படும் வகையில் இ - -ஆபீஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் வாயிலாக, அரசு அலுவலகங்களின் வழக்கமான பணிகள், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்பட்டு, அனைத்து துறை அலுவலகங்களும் அவற்றை பயன்படுத்த துவங்கியுள்ளன.
இருப்பினும், 'இ - -ஆபீஸ்' திட்டம் செயல்படுத்தப்பட்டு, இரண்டு ஆண்டுகளான நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு அளவில் இத்திட்டத்தை அரசு ஊழியர்கள் பயன்படுத்தாமல் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில், ஆவணங்கள், கோப்புகள் உள்ளிட்டவை காகித வடிவிலேயே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கையாள்கின்றனர்.
இ- - ஆபீஸ் திட்டத்தை ஊரக வளர்ச்சி, வருவாய் போன்ற துறைகள் முழுவீச்சில் பயன்படுத்துகின்றனர். ஆனால், பெரும்பாலான துறைகளில், இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாமல், பழைய முறையான காகிதக் கோப்புகளையே பயன்படுத்துகின்றனர்.
இத்திட்டம் வாயிலாக பல்வேறு நன்மைகள் உள்ளன. குறிப்பாக, அலுவலகத்தில் இருக்கும் கோப்புகள் காணாமல் போக வாய்ப்பு இல்லை. கோப்புகளின் நகல் வெளிநபர்களிடம் செல்வதற்கான வாய்ப்பு குறைவு. கையாள்வதற்கு எளிமையானது.
இந்த திட்டம் முழு வீச்சில் செயல்படுத்த, அந்தந்த துறை உயரதிகாரிகள், கீழ்நிலை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினால் மட்டுமே, டிஜிட்டல் மயமாகும் பணிகள் தீவிரமாகும்.
எனவே, இந்த திட்டத்தைக் கையாண்டால், காகித கோப்புகளுக்கு செலவிடப்படும் லட்சக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும்.