/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வள்ளி திருவிழா சீர்வரிசை குன்றத்துாரில் விமரிசை
/
வள்ளி திருவிழா சீர்வரிசை குன்றத்துாரில் விமரிசை
ADDED : மே 03, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:முருகப்பெருமான், மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த வள்ளியை மணந்ததால், மலைக்குறவன் பழங்குடி சமூகத்தினர் மா, பலா, வாழை, மலைத்தேன், தினை மாவு, காய்கறி உள்ளிட்ட சீர்வரிசைகளை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று, மலைக்குறவன் பழங்குடி மக்கள் 200க்கும் மேற்பட்டோர், குன்றத்துார் திருநாகேஸ்வரர் கோவிலில் இருந்து சீர்வரிசைகளை தலையில் ஏந்தி, வேலன் ஆட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம் ஆடியவாறு, மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.
குன்றத்துார் மலை மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு, அவற்றை படைத்து வழிபட்டனர்.