/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி மீது வேன் மோதி கிளீனர் பலி
/
லாரி மீது வேன் மோதி கிளீனர் பலி
ADDED : ஏப் 26, 2024 09:27 PM
போரூர்:தாம்பரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 38. லோடு வேன் ஓட்டுநர். இவர், நேற்று அதிகாலை தாம்பரத்தில் இருந்து புழல் நோக்கி வேனில் சென்றார். கிளீனராக, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பீபின், 35 என்பவர் உடன் சென்றார்.
தாம்பரம் --- மதுரவாயல் பைபாஸ், போரூர் ஏரி அருகே, கட்டுப்பாட்டை இழந்த லோடு வேன், முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது.
இதில், லோடு வேன் முகப்பின் ஒரு பகுதி முற்றிலும் நொறுங்கியது.
இந்த விபத்தில், லோடு வேனில் சென்ற கிளீனர் பீபின் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், லோடு வேனில் சிக்கியிருந்த ஓட்டுநர் வெங்கடேஷனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பீபின் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

