/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் ரத்து
/
மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் ரத்து
ADDED : ஏப் 26, 2024 09:26 PM
காஞ்சிபுரம்:தமிழகத்தில் கடந்த 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்தாலும், ஓட்டு எண்ணும் நாளான, ஜூன் 4ம் தேதி வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.
புதிய திட்டங்கள் அறிவிப்பதோ, அரசு திட்டங்களை ஆய்வு செய்வதோ, மக்களிடம் குறைதீர் கூட்டங்கள் நடத்துவதோ என, வழக்கமான அரசு பணிகள் அடுத்த ஒரு மாதம் நடைபெறாது.
இதன் ஒரு பகுதியாக, தொழிலாளர் தினமான மே 1ம் தேதி வழக்கமாக நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் இம்முறை ரத்து செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மே 1ல் கிராம சபை கூட்டம் நடைபெறாது என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி தெரிவித்தார்.

