/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுவள்ளூர் கிராமத்தினர் நிலம் எடுக்க ஆட்சேபனை
/
சிறுவள்ளூர் கிராமத்தினர் நிலம் எடுக்க ஆட்சேபனை
ADDED : மார் 21, 2024 10:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்துார் சுற்றிய 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
நில எடுப்புக்கு ஆட்சேபனை இருந்தால், தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, சிறுவள்ளூர் கிராமத்தில், நில எடுப்பு காரணமாக பாதிக்கப்படக் கூடியவர்களில், 50க்கும் மேற்பட்டோர், வெள்ளைகேட் பகுதியில் அமைந்துள்ள நில எடுப்பு அலுவலகத்தில் கூடினர்.
நில எடுப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து மனுவாக அளித்தனர். நிலங்களை கையகப்படுத்தினால், வாழ்வாதாரம் பாதிக்கும் உள்ளிட்ட காரணங்களை தெரிவித்து ஆட்சேபனை தெரிவித்தனர்.

