/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கச்சபேஸ்வரர் சூரிய பிரபையில் உலா
/
காஞ்சி கச்சபேஸ்வரர் சூரிய பிரபையில் உலா
ADDED : ஏப் 17, 2024 10:40 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனாகிய கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பவழக்கால் சப்பரத்திலும், இரவு, 'சிம்ம வாகனத்திலும் சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கச்சபேஸ்வரர் வீதியுலா வந்தார்.
இதில், இரண்டாம் நாள் உற்சவமான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளிலும் உலா வந்தார். ஐந்தாம் நாள் உற்சவமாக வரும் 20ம் தேதி காலை அதிகார நந்தி சேவை, முடங்கு வீதி உற்சவமும், இரவு திருக்கல்யாண உற்சவமும் விமரிசையாக நடக்கிறது.
வரும் 22ல் காலை தேரோட்டமும், 24ல் இரவு முருக்கடி சேவை தலமகிமை காட்சியும், 25ல் இரவு வெள்ளிரத உற்சவமும், பஞ்சமூர்த்திகள் உற்சவமும் நடக்கிறது.

