ADDED : மார் 31, 2024 12:43 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்வழி தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், பரமேஸ்வரமங்கலம் பகுதி வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், சாலை ஓரம் அமைக்கப்பட்ட புதிய மின் கம்பங்களில் எச்சரிக்கை சிக்னல் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், படுநெல்லி, கம்மவார்பாளையம், கோவிந்தவாடி உள்ளிட்ட பிரதான கடவுப்பாதைகள் அருகே, எச்சரிக்கை சிக்னல் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதன் மூலமாக கிராமங்களில் இருந்து, காஞ்சிபுரம் - அரக்கோணம் பிரதான சாலைகளில் விபத்து தவிர்க்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

