/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் 'கட்'
/
மின் மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் 'கட்'
ADDED : ஆக 18, 2024 11:55 PM

ஊவேரி : காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி ஊராட்சியில், ஊவேரி, புத்தேரி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, குடிநீரை நீரேற்றம் செய்து, பைப் லைன்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஒரு வாரமாக, மின் மோட்டார் பழுதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்ய முடியவில்லை. குடிநீர் வினியோகம் இல்லாததால், கிராமத்தினர் சிறுமின் விசை நீர்த்தேக்க தொட்டி மற்றும் வயலுக்கு நீரை பாய்ச்சும் பம்பு செட்களில் தண்ணீரை பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஊராட்சி நிர்வாகம் மின் மோட்டாரை சரி செய்து, தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, கிராமத்தினர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

