sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலாஜாபாத்தில் ரூ. 14.79 கோடியில் துவங்கிய குடிநீர் திட்ட பணிகள் மந்தம்; கோடையில் தட்டுப்பாடு நிலவும் அபாயம்

/

வாலாஜாபாத்தில் ரூ. 14.79 கோடியில் துவங்கிய குடிநீர் திட்ட பணிகள் மந்தம்; கோடையில் தட்டுப்பாடு நிலவும் அபாயம்

வாலாஜாபாத்தில் ரூ. 14.79 கோடியில் துவங்கிய குடிநீர் திட்ட பணிகள் மந்தம்; கோடையில் தட்டுப்பாடு நிலவும் அபாயம்

வாலாஜாபாத்தில் ரூ. 14.79 கோடியில் துவங்கிய குடிநீர் திட்ட பணிகள் மந்தம்; கோடையில் தட்டுப்பாடு நிலவும் அபாயம்


ADDED : மார் 14, 2025 08:23 PM

Google News

ADDED : மார் 14, 2025 08:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில், கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தும் வகையில், 14.79 கோடி ரூபாய் செலவில் துவங்கிய குடிநீர் திட்டப் பணிகள் விரைந்து முடிக்காததால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, வாலாஜாபாத் பாலாற்றில் 5 ஆழ்த்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 5 ஆழ்த்துளை கிணறுகள் வாயிலாக உறிஞ்ப்படும் நீரை, நிலத்தடியில் புதைத்த பைப் மூலம் வாலாஜாபாத் நகரில் உள்ள 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி அதன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. எனினும், கோடைக்காலத்தில் இந்த குடிநீர் போதுமானதாக இல்லை.

இதனால், வாலாஜாபாத் பேரூராட்சியில், கூடுதலாக குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த வேண்டும் என, அப்பேரூராட்சி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, வாலாஜாபாத் பேரூராட்சியில் கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த 2022- -- 23ம் ஆண்டு, 'அம்ருத்' திட்டத்தின் கீழ், 14.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்தொகையில், வாலாஜாபாத் பாலாற்று படுகையில் கூடுதலாக 4 ஆழ்த்துளை கிணறுகள் மற்றும் அப்பகுதியில், 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் பம்ப் அறை அமைக்கப்படுகிறது.

அதேபோல, வாலாஜாபாத் பேரூராட்சி 2வது வார்டில் உள்ள மெக்ளின்புரம் பகுதியில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதியதாக அமைக்கும் பணி நடைபெறுகிறது.

மேலும், வாலாஜாபாத் பாலாற்றில் உள்ள ஆழ்த்துளை கிணறுகளில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீர், வாலாஜாபாத் நகரின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு சென்றடைய நிலத்தடியில் புதிய பைப்புகள் அமைக்கப்படுகிறது.

இதேபோல வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பழைய குடிநீர் பைப்புகளை அகற்றி, புதிய பைப்புகள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதன் வாயிலாக வாலாஜாபாத் பேரூராட்சியில், 3 ஆயிரத்து 991 வீடுகளுக்கு நேரடியாக குழாய் இணைப்புகள் பொருத்தப்பட்டு அக்குடும்பங்கள் பயன்பெறக்கூடும்.

இப்பணிகள் அனைத்தும் டெண்டர் விடப்பட்டு கடந்த ஆண்டு துவங்கியது. பணி முடிய இறுதி நாளாக மார்ச் 31ம் தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும், பெரும்பாலான இப்பணிகள் நிறைவு பெறாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக புகார் கூறும் அப்பகுதியினர், பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா கூறியதாவது,

வாலாஜாபாத் பேரூராட்சியில், 'அம்ருத்' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

பாலாற்றில் புதியதாக 4 குடிநீர் ஆழ்த்துளை கிணறுகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

இதேபோன்று, பாலாற்றங்கரையோரம் புதியதாக அமைக்கப்படும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி பணி முடிந்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டு தெருக்களிலும், 47 கி.மீ., துாரத்திற்கு புதியதாக குடிநீர் குழாய் பைப்பு புதைத்தல் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

கோடைக்காலம் நெருங்குவதால், பணிகளை விரைந்து முடிக்க துறை நீதியான அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, பணியை துரிதப்படுத்தும்படி ஒப்பந்ததாரர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இத்திட்ட வாயிலாக பணி முடிவுற்ற வல்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், புதிய நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி அடுத்த சில தினங்களில் குடிநீர் வினியோகிக்கப்பட உள்ளது.

இன்னும் 4 வார்டுகளில், நிலத்தடியில் புதிய குடிநீர் பைப்புகள் பதிக்கப்பட வேண்டி உள்ளது.

அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி, விரைவில் பயன்பாட்டிற்கு விடப்பட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us