/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் தொட்டி கேட்வால்வு பழுது ஓரிக்கையில் வீணாகும் குடிநீர்
/
குடிநீர் தொட்டி கேட்வால்வு பழுது ஓரிக்கையில் வீணாகும் குடிநீர்
குடிநீர் தொட்டி கேட்வால்வு பழுது ஓரிக்கையில் வீணாகும் குடிநீர்
குடிநீர் தொட்டி கேட்வால்வு பழுது ஓரிக்கையில் வீணாகும் குடிநீர்
ADDED : மார் 04, 2025 01:53 AM

ஓரிக்கை, காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு ஓரிக்கை திரவுபதியம்மன் கோவில் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், சேமித்து வைக்கப்படும் குடிநீர், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடிநீர் திறந்து விடும் 'கேட்வால்வில்' பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
கோடை காலம் துவங்கி, குடிநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கேட்வால்வில் இருந்து வீணாகும் குடிநீரால்,இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதோடு, நீண்ட நேரம் மின்மோட்டார் இயங்குவதால், மின்சாரமும் விரயமாவதுடன் மின் கட்டணமும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. எனவே, குடிநீர் வீணாகுவதை தடுக்கும் வகையில்,பழுதடைந்த 'கேட் வால்வை' சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.