/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிலம்ப வீரர்களுக்கு காஞ்சியில் வரவேற்பு
/
சிலம்ப வீரர்களுக்கு காஞ்சியில் வரவேற்பு
ADDED : மே 07, 2024 09:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:மாநில அளவிலான சிலம்ப போட்டி கோவையில் நடந்தது. இதில் 7 - 25 வயதுக்கு உட்பட்டோருக்கான பல்வேறு போட்டிகளில் காஞ்சிபுரம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 29 பேர் பங்கேற்றனர்.
இவர்கள் அனைவரும் பல்வேறு சுற்றுகளில் நடந்த போட்டியில், பங்கேற்று, தங்கம், வெள்ளி, வெண்கலம் என, 29 பதக்கங்களை பெற்று, நேற்று காஞ்சிபுரம் திரும்பினர்.
சிலம்ப போட்டியில் வென்ற வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக காஞ்சி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், வெற்றி பெற்ற அனைவருக்கும் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

