/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிக்கராயபுரம் கல்குவாரிகள் நீர்த்தேக்க திட்டம் என்ன ஆனது? அரசுக்கு தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
/
சிக்கராயபுரம் கல்குவாரிகள் நீர்த்தேக்க திட்டம் என்ன ஆனது? அரசுக்கு தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
சிக்கராயபுரம் கல்குவாரிகள் நீர்த்தேக்க திட்டம் என்ன ஆனது? அரசுக்கு தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
சிக்கராயபுரம் கல்குவாரிகள் நீர்த்தேக்க திட்டம் என்ன ஆனது? அரசுக்கு தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
ADDED : செப் 07, 2024 07:48 PM

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அடுத்த சிக்கராயபுரத்தில் 23 கல் குவாரி குட்டைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், 300 முதல் 400 அடி ஆழம் உடையவை.
கைவிடப்பட்ட இந்த கல் குவாரி குட்டைகளில், ஆண்டு முழுதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
கடந்த 2016 -- 17ல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் ஆகிய ஏரிகள் வறண்டன.
இதனால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, சிக்கராயபுரத்தில் உள்ள 23 கல்குவாரிகளையும் ஒருங்கிணைத்து, 210 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 2022ல் இப்பகுதியை நேரில் ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவும், இதை உறுதிப்படுத்தினார். ஆனால், நீர்த்தேக்கம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கல் குவாரிகளில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. கல்குவாரி நீரை டேங்கர் லாரிகளில் எடுத்து விற்பனை செய்வதும் நடக்கிறது. இது தொடர்பாக கடந்த ஆக., 19ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
குன்றத்துார், சிக்கராயபுரம் கல்குவாரி நீர்த்தேக்க திட்டத்துடன் தொடர்புடைய துறை என்பதால், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சி.எம்.டி.ஏ.,வை, இந்த வழக்கில் சேர்க்கிறோம்.
கிடப்பில் உள்ள சிக்கராயபுரம் கல்குவாரி நீர்த்தேக்க திட்டம் என்ன ஆனது என்பது குறித்து, தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்க துறை, சி.எம்.டி.ஏ., ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.