/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிக்கரை மண் சாலை படுமோசம் தார்ச்சாலையாக மாறுவது எப்போது?
/
ஏரிக்கரை மண் சாலை படுமோசம் தார்ச்சாலையாக மாறுவது எப்போது?
ஏரிக்கரை மண் சாலை படுமோசம் தார்ச்சாலையாக மாறுவது எப்போது?
ஏரிக்கரை மண் சாலை படுமோசம் தார்ச்சாலையாக மாறுவது எப்போது?
ADDED : ஆக 20, 2024 11:15 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த புள்ளலுார் கிராமத்தில் இருந்து, அரங்கநாதபுரம் கிராமத்திற்கு செல்லும் அய்யனேரிக்கரை சாலை உள்ளது.
இந்த மண் சாலை வழியாக சாமந்திபுரம், கொட்டவாக்கம், மூலப்பட்டு, மணியாட்சி, வரதாபுரம் ஆகிய பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், புள்ளலுார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கணபதிபுரம், சித்துார் ஆகிய கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த ஏரிக்கரை மண் சாலையை, தார்ச்சாலையாக செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் செவிசாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது, மழைக்காலம் துவங்க உள்ளதால், ஏரிக்கரை சாலையில் இருக்கும் மண் சாலை பள்ளத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும், மழைக்காலத்தில் இந்த மண் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடும்.
எனவே, புள்ளலுார் - அரங்கநாதபுரம் மண் சாலையை, மழைக்காலம் துவங்கும் முன், தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

