/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் அறுவடை பணி தீவிரம் கொள்முதல் செய்வது எப்போது?
/
நெல் அறுவடை பணி தீவிரம் கொள்முதல் செய்வது எப்போது?
நெல் அறுவடை பணி தீவிரம் கொள்முதல் செய்வது எப்போது?
நெல் அறுவடை பணி தீவிரம் கொள்முதல் செய்வது எப்போது?
ADDED : ஆக 12, 2024 03:24 AM

உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடப்பாண்டு சொர்ணவாரி பட்ட சாகுபடிக்கு. 8,800 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த பயிர்கள் அறுவடைக்கு தயாரானதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் அறுவடை பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், இதுவரை இரண்டாம் போகத்திற்கான அரசு நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்படாமல் உள்ளது.
இதனால், அறுவடை செய்த நிலங்களில் மகசூல் செய்த நெல்லை, சில விவசாயிகள் தங்களது வீடுகளிலும், சிலர் நெல் கொள்முதல் நிலையங்களிலும் குவித்து வைத்து உள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை துவங்கி, கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை வெளுத்து வாங்குவதால், அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பதில் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, விரைவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்திரமேரூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.