/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தேரியில் குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
/
புத்தேரியில் குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
புத்தேரியில் குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
புத்தேரியில் குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
ADDED : மே 07, 2024 04:28 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, சேதுபதி நகரில், அப்பகுதியினரின் கூடுதல் குடிநீர் ஆதாரத்திற்காக, ஆறு மாதங்களுக்கு முன், சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இருப்பினும் சிறுமின்விசை குழாய்க்கு மும்முனை மின்சாரம் இணைப்பு வழங்கப்படாததால், குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும் குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால், குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாகிறது.
இதனால், அப்பகுதியினர் கூடுதல் குடிநீருக்காக திண்டாடி வருகின்றனர். எனவே, குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புத்தேரி கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
அதேபோல, புத்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கக்கன் நகர், கங்கையம்மன் கோவில் தெருவிலும் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''புத்தேரி ஊராட்சியில் உள்ள மூன்று குடிநீர் தொட்டிகளும், அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.