/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புலிவாய் அமரன் குளம் தூர்வாரி பராமரிக்கப்படுமா?
/
புலிவாய் அமரன் குளம் தூர்வாரி பராமரிக்கப்படுமா?
ADDED : ஆக 15, 2024 10:48 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய் கிராமத்தில், விவசாய நிலங்களையொட்டி 1 ஏக்கர் பரப்பில் அமரன் குளம் உள்ளது.
இந்த பொதுக்குளத்தை சுற்றி, 150 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் நவரை பருவத்திற்கு ஏரி பாசனம் மற்றும் சொர்ணாவாரி பட்டத்திற்கு கிணற்று பாசனம் வாயிலாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். கோடைக்காலத்தின் போது, இப்பகுதி விவசாய நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அமரன் குளம் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
அமரன் குளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும், குளம் முழுமையாக துார் வாராமல் கரைப்பகுதி மட்டும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், இக்குளத்தில் போதுமான தண்ணீர் தேக்கமின்றி வறண்டு காணப்படுகிறது.
எனவே, புலிவாய் கிராமத்தில் உள்ள அமரன் குளத்தை துார்வாரி ஆழப்படுத்தி, நீர் வரத்து கால்வாய் ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

