/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள் அகற்றப்படுமா?
/
கால்வாயில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள் அகற்றப்படுமா?
கால்வாயில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள் அகற்றப்படுமா?
கால்வாயில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள் அகற்றப்படுமா?
ADDED : செப் 02, 2024 10:14 PM

காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்ட, மஞ்சள் நீர் கால்வாய், கயிலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில்துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர் மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தா பேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இந்நிலையில், திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் இக்கால்வாயில் செடி, கொடிகள், கோரை புற்கள் புதர் போல மண்டி, கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.
இதனால், மழைக்காலத்தில் மழைநீர் வெளியேறாத சூழல் ஏற்படும். எனவே, திருக்காலிமேடு அரசு பள்ளி பின்புறம், மஞ்சள் நீர் கால்வாயில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--- எஸ்.லோகேஷ்குமார்,
காஞ்சிபுரம்.