/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிக்கரை சாலையோரம் தடுப்பு அமைக்கப்படுமா?
/
ஏரிக்கரை சாலையோரம் தடுப்பு அமைக்கப்படுமா?
ADDED : செப் 01, 2024 03:52 AM

உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், மணல்மேடு கூட்டுச்சாலையில் இருந்து, புத்தளி மற்றும் சிறுகளத்துார் ஏரிக்கரை வழியாக மலையாங்குளம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது.
இச்சாலை வழியாக மலையாங்குளம், காவாம்பயிர், அப்பையநல்லுார் உள்ளிட்ட கிராமத்தினர், உத்திரமேரூர் சென்று வருகின்றனர்.
இச்சாலையில், சிறுகளத்துார் ஏரிக்கரை மீதுள்ள சாலை வளைவில் சாலையோர இருபுறமும்பள்ளமாக உள்ளது. இதில், ஒரு பக்கம் கரைக்கு மட்டும் தடுப்பு அமைத்து, மற்றொருபுறம் தடுப்பு ஏதும் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், ஏரிக்கரை சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, சிறுகளத்துார்ஏரிக்கரை சாலையோர மற்றொரு புறமும் தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.