/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விதிமீறும் கனரக லாரிகள் கடிவாளம் போடப்படுமா?
/
விதிமீறும் கனரக லாரிகள் கடிவாளம் போடப்படுமா?
ADDED : ஆக 12, 2024 04:52 AM

பரந்துார் : சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணிக்கு, மண் எடுத்து செல்ல டிப்பர் லாரிகள் மற்றும் இரும்பு கம்பிகள் எடுத்து செல்ல கனரக லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, பள்ளூர் - சோகண்டி சாலை மற்றும் பொன்னேரிக்கரை - பரந்துார் சாலையில், கனரக லாரிகளில் இரும்பு கம்பி எடுத்து செல்லும் போது, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், சிவப்பு நிற எச்சரிக்கை துணிகள் கட்டுவதில்லை.
மேலும், முக்கோண வடிவில் எச்சரிக்கை பிரதிபலிப்பானும் பொருத்துவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இந்த லாரியை பின் தொடர்ந்து செல்லும் வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாயநிலை உள்ளது.
பரந்துார், சிறுவள்ளூர் ஆகிய வளைவுகளில் செல்லும் போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என, இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, கனரக லாரிகளில் இரும்பு பொருட்களை ஏற்றி செல்லும் போது, எச்சரிக்கை தடுப்பு சாதனங்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.