/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தின்னர் குடித்து பெண் உயிரிழப்பு
/
தின்னர் குடித்து பெண் உயிரிழப்பு
ADDED : ஜூன் 11, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத், : வாலாஜாபாத் ஒன்றியம்,முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மனைவி லட்சுமி 46. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே கணவன், மனைவி இடையே சில நாட்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் வைத்திருந்த தின்னரை குடித்து லட்சுமி உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவரது உறவினர்கள் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லட்சுமி, நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.