/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கேன்டீன் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
/
கேன்டீன் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
கேன்டீன் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
கேன்டீன் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
ADDED : ஆக 22, 2024 06:38 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கமலி பெஹாரா, 40; ஸ்ரீபெரும்புதுார் அருகே, மண்ணுார் பகுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள, தனியார் தொழிற்சாலைகளுக்கு உணவு அளிக்கும் கேன்டீனில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இரவு உணவு டெலிவரி செய்ய, நேற்று முன்தினம் இரவு, குட்டியானை வாகனத்தில் சென்றார்.
பின், அதே வாகனத்தின் பின்னால் அமர்ந்து கொண்டு மீண்டும் மண்ணுார் வந்த போது, தண்டலம் -- பேரம்பாக்கம் சாலையில், மண்ணுார் அருகே சென்ற போது, கமலி பெஹாரா எதிர்பாராத விதமாக, வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.
இதில், படுகாயம் அடைந்து அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கா ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குட்டியானை வாகனத்தின் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.