/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விமான நிலையத்தில் பெண் உயிரிழப்பு
/
விமான நிலையத்தில் பெண் உயிரிழப்பு
ADDED : செப் 07, 2024 07:04 AM
சென்னை : சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சர்லா, 65. இவருக்கு 10 ஆண்டுகளாக இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளது. நேற்று முன்தினம், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவர்கள், தொடர் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து, சர்லா உறவினர்கள் உதவியோடு, சிறப்பு ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் சத்தீஸ்கரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார். விமானம், சென்னை வான்வெளியை நெருங்கியபோது, அவருக்கு உடல்நலம் மோசமடைந்தது.
விமானி, உடனடியாக விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கியதும், மருத்துவ குழுவினர் விரைந்து சென்று, பரிசோதனை மேற்கொண்டனர். அவர், ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.