ADDED : ஆக 11, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அருகே உள்ள ஒழகோல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 36. இவர், சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று, வெங்க டேசன் தன் இருசக்கரவாகனத்தில், பாலுசெட்டிச்சத்திரம் நோக்கி சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, வழக்கு பதிந்த பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

