/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிலாளர்கள் தங்கும் விடுதி ஸ்ரீபெரும்புதுாரில் இன்று திறப்பு
/
தொழிலாளர்கள் தங்கும் விடுதி ஸ்ரீபெரும்புதுாரில் இன்று திறப்பு
தொழிலாளர்கள் தங்கும் விடுதி ஸ்ரீபெரும்புதுாரில் இன்று திறப்பு
தொழிலாளர்கள் தங்கும் விடுதி ஸ்ரீபெரும்புதுாரில் இன்று திறப்பு
ADDED : ஆக 16, 2024 10:58 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லம் சிப்காட் பகுதியில், தொழில் துறை சார்பில், 706 கோடி ரூபாய் மதிப்பில், 18,000 தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய ஏதுவாக, பிரமாண்ட விடுதி, இரண்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது.
இந்த விடுதி முழுதும் பெண்கள் தங்கி பணிபுரிய சிறப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. விடுதி கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 5:00 மணிக்கு விடுதியை நேரில் திறக்க உள்ளார். இதில், தொழில் துறை அமைச்சர் ராஜா, சிறு, குறு நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பாக்ஸ்கான் தொழிற்சாலை நிறுவனத்திடம், இந்த விடுதியை, தொழில்துறை ஒப்படைக்கிறது. பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், இந்த விடுதியில் தங்கி பணியாற்றலாம்.
இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆறு ஊழியர்கள் சேர்ந்து தங்க ஒரு பெரிய அறை, சமையலறை, கழிப்பறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
விடுதியில் தங்குவதற்கு, தொழிலாளர்கள் செலுத்தும் கட்டணத்தை, பாக்ஸ்கான் நிறுவனம் வசூலித்து, அரசுக்கு செலுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

