/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏர் - இந்தியா எக்ஸ்பிரசில் இனி வாரணாசிக்கு பறக்கலாம்
/
ஏர் - இந்தியா எக்ஸ்பிரசில் இனி வாரணாசிக்கு பறக்கலாம்
ஏர் - இந்தியா எக்ஸ்பிரசில் இனி வாரணாசிக்கு பறக்கலாம்
ஏர் - இந்தியா எக்ஸ்பிரசில் இனி வாரணாசிக்கு பறக்கலாம்
ADDED : மார் 01, 2025 12:06 AM
சென்னை, சென்னையில் இருந்து பீஹார் மாநிலம் பாட்னா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு, தினசரி விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்க உள்ளது.
சென்னையில் இருந்து பாட்னா மற்றும் வாரணாசிக்கு இடையே தினசரி விமானங்களை, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' நிறுவனம் இயக்கி வருகிறது. பயணியரும் தினமும் அதிகளவில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து பாட்னா மற்றும் வாரணாசி இடையே, தினசரி விமானங்களை மார்ச் 30ம் தேதி முதல் இயக்க ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் இருந்து பாட்னாவுக்கு தினசரி காலை 6:00 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8:50 மணிக்கு பாட்னா சென்றடையும். பாட்னாவில் இருந்து காலை 9:20 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 12:10 மணிக்கு சென்னை வந்தடையும். இதேபோல் வாரணாசிக்கு சென்னையில் இருந்து தினசரி மதியம் 2:00 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 4:40 மணிக்கு வாரணாசி வந்தடையும்.
வாரணாசியில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 7:55 மணிக்கு சென்னை வந்தடையும்.