ADDED : செப் 07, 2024 07:03 PM
காஞ்சிபுரம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, கட்டமேடு கிராமத்தைச் சேர்ந்த சரண்யா, 24. மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மிட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜீவப்பிரியன், 29. இருவரும், காஞ்சிபுரம் மாமல்லன் நகரில், வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.
நேற்று மர்மமான முறையில் சரண்யா இறந்து கிடந்தார். இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் ஆண்டாள், காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் சம்பட இடத்திற்கு வந்து, சரண்யாவின் உடலை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், சரண்யா, விஷம் அருந்தியது தெரிய வந்தது. ஜீவப்பிரியன், சம்பவ இடத்திலிருந்து வெளியேறி இருந்தும், போலீஸ் விசாரனையில் தெரிய வந்தது.
சரண்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விஷம் அருந்த வைக்கப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும்.