ADDED : ஏப் 28, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, : புளியந்தோப்பு, பட்டாளம், கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர், 'கஞ்சாமணி' என்கிற தீனதயாளன், 26. கடந்த 26ம் தேதி இரவு, தனக்குத்தானே ஊசி மூலம் போதை மருந்தை உடலில் செலுத்திக் கொண்டு, மயக்கம் அடைந்துள்ளார்.
அவரது நண்பர்கள் சஞ்சய், பிரபு உள்ளிட்டோர், புளியந்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீனதயாளனை சேர்த்து விட்டு தலைமறைவாகினர்.
தீனதயாளனக்கு முதலுதவி தரப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்த தீனதயாளன், நேற்று காலை உயிரிழந்தார்.
மருத்துவமனை தரப்பில் பெறப்பட்ட தகவலை அடுத்து, புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்து போன தீனதயாளன் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

