ADDED : நவ 16, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரத்தில் கூட்டுறவு துறை சார்பில், தனியார் திருமண மண்டபத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை, அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.
பின், 1,059 பயனாளிகளுக்கு, சிறு வணிக கடன், வீட்டு அடமான கடன், தாட்கோ கடன் என, பல்வேறு திட்டங்களின் கீழ், 10.23 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
மேலும், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.