/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பஸ் மீது லாரி மோதி10 பேர் படுகாயம்
/
பஸ் மீது லாரி மோதி10 பேர் படுகாயம்
ADDED : அக் 15, 2025 12:06 AM

உத்திரமேரூர்:திருமுக்கூடல் பாலாறு பாலத்தில் சென்ற அரசு பேருந்து மீது, லாரி மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக நெய்யாடு பாக்கத்திற்கு அரசு பேருந்து நேற்று மாலை சென்றது. உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பாலாறு பாலத்தில் பேருந்து சென்றபோது, எம்.சாண்ட் மணல் ஏற்றி எதிரே வந்த லாரி, பேருந்தின் பக்கவாட்டில் மோதியது.
அதில், பேருந்தில் பயணம் செய்த ஒரு சிறுமி உட்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.