/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிலம்பம் போட்டியில் காஞ்சிக்கு 28 பதக்கங்கள்
/
சிலம்பம் போட்டியில் காஞ்சிக்கு 28 பதக்கங்கள்
ADDED : அக் 15, 2025 12:03 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், காஞ்சிபுரம் மாவட்ட அணியினர் இரண்டாம் பரிசு பெற்றனர்.
தென்னிந்திய பாரம்பரிய விளையாட்டு மற்றும் சிலம்பம் கலை கழகம், தமிழ்நாடு மாநில வெட்ரான்ஸ் இந்தியா, விளையாட்டு பிரிவு சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் என, 500 பேர் போட்டியில், பங்கேற்றனர்.
இதில், தர்மபுரி மாவட்ட அணி 32 பதக்கங்கள் பெற்று முதலிடமும், காஞ்சிபுரம் மாவட்ட அணி 28 பதக்கங்களுடன் இரண்டாம் இடமும், 22 பதக்கங்கள் பெற்று சென்னை அணி மூன்றாவது இடமும் பெற்றன.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள், வரும் 2026ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், தர்மபுரியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என, காஞ்சிபுரம் மாவட்ட வெட்ரான்ஸ் இந்தியா விளையாட்டு பிரிவு மாவட்ட செயலர் கராத்தே பாலா தெரிவித்தார்.