/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண்டிகை ரேஷன் கடைக்கு கூரை அமைக்க வலியுறுத்தல்
/
கண்டிகை ரேஷன் கடைக்கு கூரை அமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 15, 2025 12:01 AM

ஸ்ரீபெரும்புதுார்:பண்ருட்டி ஊராட்சிக்குட்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு வசதியாக கூரை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பண்ருட்டி ஊராட்சிக்குட்பட்ட கண்டிகை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.
இப்பகுதி மக்கள் வண்டலுார் --- வாலாஜாபாத் சாலையோரம் உள்ள ரேஷன் கடையில், அரிசி, பருப்பு, சக்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை மாதந்தோறும் வாங்குகின்றனர்.
இந்த ரேஷன் கடைக்கு வெளியே கூரை இல்லாததால், ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள், வெயிலிலும், மழையிலும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், பெண்கள், வயதானோர் கடும் அவதி அடைந்து வருகிறனர். அதேபோல், ரத்த அழுந்தம் மற்றும் சக்கரை நோய் உள்ளவர்கள், நீண்ட நேரம் வெயிலில் நிற்க முடியாமல் மயக்கம் அடைகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடையின் வெளியில் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.