/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்தட பாதையில் மரக்கிளைகள் பள்ளி அருகில் விபத்து அபாயம்
/
மின்தட பாதையில் மரக்கிளைகள் பள்ளி அருகில் விபத்து அபாயம்
மின்தட பாதையில் மரக்கிளைகள் பள்ளி அருகில் விபத்து அபாயம்
மின்தட பாதையில் மரக்கிளைகள் பள்ளி அருகில் விபத்து அபாயம்
ADDED : அக் 14, 2025 11:58 PM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் கிழக்கு மாட வீதியில் உள்ள துவக்க பள்ளி அருகில், மின்தட பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, யதோக்தகாரி பெருமாள் கோவில் கிழக்கு மாட வீதியில், வீர ஆஞ்சநேயர் கோவில், பட்டு ஜவுளி கடை, துவக்கப் பள்ளி, திருமண மண்டபம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான குறைந்த மின்னழுத்த மின்தட பாதையும், சீரான மின்சாரம் வழங்க மின் மாற்றிக்கு செல்லும் உயர் மின்னழுத்த மின்தட பாதை என, இரு மின்தட பாதை செல்கிறது.
இந்நிலையில், துவக்கப் பள்ளி நுழைவாயில் அருகில், மின் கம்பிகளை உரசும் வகையில் மரக்கிளைகள் வளர்ந்துள்ளன.
இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது மரக்கிளைகள் முறிந்து விழுந்தால், பெரிய அளவில் மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளதாக பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், காஞ்சிபுரம் யதோக்தகாரி கிழக்கு மாட வீதியில், மின்கம்பிகளுக்கு மேல் செல்லும் காட்டு வாகை மரங்களின் கிளைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.