/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
10 டன் பிளாஸ்டிக் மாங்காடில் பறிமுதல்
/
10 டன் பிளாஸ்டிக் மாங்காடில் பறிமுதல்
ADDED : ஜன 05, 2025 01:25 AM

குன்றத்துார்:மாங்காடு நகராட்சியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பதுக்கி விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.
அதையடுத்து, மாங்காடு நகராட்சி கமிஷனர் நந்தினி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள், மாங்காடு கங்கை அம்மன் கோவில் பின்புறம் உள்ள கடையில், நேற்று திடீர் சேதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த கடை மற்றும் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பிளாஸ்டிக் கப், கேரி பேக்குகள், டம்ளர் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரிந்தது.
இதையடுத்து, கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், 10 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

