/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மனநலம் பாதித்த மாணவியிடம் அத்துமீறியவருக்கு '10 ஆண்டு'
/
மனநலம் பாதித்த மாணவியிடம் அத்துமீறியவருக்கு '10 ஆண்டு'
மனநலம் பாதித்த மாணவியிடம் அத்துமீறியவருக்கு '10 ஆண்டு'
மனநலம் பாதித்த மாணவியிடம் அத்துமீறியவருக்கு '10 ஆண்டு'
ADDED : அக் 01, 2024 07:26 AM

சென்னை : தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி, தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவரை, அதே பகுதியைச் சேர்ந்த காவலாளி சிலம்பரசன், 40, என்பவர், கடந்த 2020ல்பாலியல் செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், தேனாம்பேட்டை அனைத்துமகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிலம்ப ரசனை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்ரீதேவி முன் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
காவலாளி சிலம்பரசன்மீதான குற்றச்சாட்டுகள்சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுஉள்ளன.
எனவே, அவருக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும்,அபராதமாக, 10,000ரூபாயும் விதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.