/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிச்சிவாக்கம் அரசு நாற்று பண்ணையில் 10,000 தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார்

ADDED : நவ 20, 2024 10:49 PM

காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, அரக்கோணம் - பேரம்பாக்கம் சாலை, பிச்சிவாக்கம் கிராமத்தில், காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துறையின், மாநில தென்னை நாற்றுப்பண்ணை இயங்கி வருகிறது.
தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில், விவசாயிகள் பயன் பெறும் வகையில், பிச்சிவாக்கம் மாநில தென்னை நாற்று பண்ணையில், பாரம்பரிய தென்னை ரகமான அரசம்பட்டி நெட்டை ரகம் 10,000 தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
அரசம்பட்டி நெட்டை ரகமானது 60 ஆண்டுகளுக்கு மேல் காய்க்கக் கூடியது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து மீண்டு வளரும் தன்மையுடையது. ஆண்டுக்கு 100- - 120 தேங்காய்கள் காய்க்கக்கூடியது. ஒரு நெட்டை ரக தென்னங்கன்றின் விலை 65 ரூபாய்.
தென்னங்கன்றுகளை மாநில தென்னை நாற்றுப்பண்ணையிலும், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு 89402 35542 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, ஸ்ரீபெரும்புதுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் முனைவர் தாமரைதுவாசன் தெரிவித்தார்.