/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் அரசு மருத்துமனையில் 2024ல் 10,000 டயாலிசிஸ் சிகிச்சை
/
காஞ்சிபுரம் அரசு மருத்துமனையில் 2024ல் 10,000 டயாலிசிஸ் சிகிச்சை
காஞ்சிபுரம் அரசு மருத்துமனையில் 2024ல் 10,000 டயாலிசிஸ் சிகிச்சை
காஞ்சிபுரம் அரசு மருத்துமனையில் 2024ல் 10,000 டயாலிசிஸ் சிகிச்சை
ADDED : ஜன 04, 2025 01:09 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 2015ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி முதல், மூன்று டயாலிசிஸ் இயந்திரம் வாயிலாக, டயாலிசிஸ் பிரிவு துவக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதலாம் ஆண்டு, 877 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நாளடைவில் டயாலிசிஸ் இயந்திரங்கள் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 12 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. டயாலிசிஸ் சிகிச்சை துவங்கியதில் இருந்து, அதிகபட்சமாக 2024ம் ஆண்டில் மட்டும், 10,000க்கும் அதிகமாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் சேவை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், செவிலியர் மாணவியர் பங்கேற்ற பேரணி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.
பேரணியை, மருத்துவமனை இணை இயக்குனர் ஹிலாரினா ஜோசிட்டா நளினி துவக்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் பங்கேற்றனர்.