/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிறிஸ்துவர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சிறுபான்மையின கமிஷன் கூட்டத்தில் வலியுறுத்தல்
/
கிறிஸ்துவர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சிறுபான்மையின கமிஷன் கூட்டத்தில் வலியுறுத்தல்
கிறிஸ்துவர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சிறுபான்மையின கமிஷன் கூட்டத்தில் வலியுறுத்தல்
கிறிஸ்துவர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சிறுபான்மையின கமிஷன் கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜன 30, 2025 12:27 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த சிறுபான்மையின கமிஷன் கலந்தாய்வு கூட்டத்தில், 'கிறிஸ்துவர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க, அரசு பரிசீலனை செய்ய வேண்டும்' என, சிறுபான்மையினப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தமிழக சிறுபான்மையின கமிஷன் தலைவர் அருண் தலைமையிலான கலந்தாய்வு கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கமிஷன் துணைத் தலைவர் அப்துல் குத்துாஸ், உறுப்பினர் செயலர் சம்பத் மற்றும் உறுப்பினர்கள், கலெக்டர் கலைச்செல்வி, போலீஸ் எஸ்.பி., சண்முகம் மற்றும் சிறுபான்மையினப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிறுபான்மையினப் பிரதிநிதிகள் வலியுறுத்தியவை:
காஞ்சிபுரத்தில் புத்த மதம் பரவலாக இருந்தது. இதனால், காஞ்சிபுரத்தின் மையப் பகுதியில் புத்தர் சிலை நிறுவ வேண்டும்
காஞ்சிபுரம் அடுத்த புத்தகரம் கிராமத்தில், புத்த விஹாரம் அமைக்க வேண்டும்
திருப்பருத்திக்குன்றம் கிராமத்தில் உள்ள சமணர் கோவில் பாழடைந்து வருகிறது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலை சீரமைக்க, நிதி ஒதுக்க வேண்டும்
சமணர்களின் எச்சங்கள், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் உள்ளன. அவற்றை போற்றி பாதுகாக்க வேண்டும். ஆற்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சமணர் கோவில்களை சீரமைத்து பாதுகாக்க வேண்டும்
வக்பு வாரிய சொத்துக்கள், அரசு இடங்களாக உள்ளன. அவற்றை வக்பு வாரிய சொத்துக்களாக மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும்
வக்பு வாரிய பள்ளிகளில் பணியாற்றுவோருக்கு, இரு சக்கர வாகனம் வாங்க, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான வயது வரம்பை, 45ல் இருந்து 55 ஆக உயர்த்த வேண்டும். வயதானோருக்கும் இத்திட்டம் பலனளிக்கும்
கிறிஸ்துவர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்
சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில், அங்கீகாரம், பணியிடங்கள் நிரப்புதல் போன்ற பிரச்னைகள் உள்ளன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.

