/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அர்த்த மச்சேந்திர ஆசனத்தில் 105 மாணவர்கள் சாதனை
/
அர்த்த மச்சேந்திர ஆசனத்தில் 105 மாணவர்கள் சாதனை
ADDED : ஜன 07, 2025 07:33 AM

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷன் அமைப்பின் தமிழ்நாடு பிரிவு இணைந்து,யோகா உலக சாதனை நிகழ்வை மேற்கொண்டனர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமையில் நடந்த நிகழ்வில், வேர்ல்ட வைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தின் தீர்ப்பாளர் சிந்துஜா வினித் முன்னிலை வகித்தார்.
மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளி முதல்வர் ஜெகதாம்பிகா, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முதல்வர் திலகா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், யோகா மைய நிறுவனர் மற்றும் பயிற்சியாளரான சந்தியா மேற்பார்வையில், ஒரே நேரத்தில், 105 மாணவர்கள், தொடர்ந்து, 10 நிமிடங்கள் அர்த்த மச்சேந்திர ஆசனத்தில் உலக சாதனை படைத்தனர்.
இவர்களது சாதனை வேர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த மாணவ - மாணவியருக்கும், பயிற்சி மையத்திற்கும் பதக்கம் மற்றும் உலக சாதனைக்கான பட்டயங்கள் வழங்கப்பட்டன.