/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி அருகே 10ம் நுாற்றாண்டு தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு
/
காஞ்சி அருகே 10ம் நுாற்றாண்டு தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு
காஞ்சி அருகே 10ம் நுாற்றாண்டு தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு
காஞ்சி அருகே 10ம் நுாற்றாண்டு தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு
ADDED : ஜூலை 14, 2025 12:39 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அருகே பூசிவாக்கம் கிராமத்தில், 10ம் நுாற்றாண்டு தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பூசிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் வீடு கட்டுவதற்கு நேற்று முன்தினம் பள்ளம் தோண்டியுள்ளார்.
அப்போது, பீடத்தில் அமர்ந்திருந்த நிலையில், கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இந்த சிலையை பத்திரமாக மீட்டு, ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை நிர்வாகத்தினர், வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது:
பூசிவாக்கம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, அபூர்வமான அமைப்புடன் செதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சதுர பீடத்தில், இடது கால் மீது, வலது கால் போட்டு இரு கால்களையும் மடக்கியவாறு உள்ளது. அதேபோல, இடது கை மீது வலது கை வைத்து, ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருக்கும் வகையில் சிலை உள்ளது.
முதுகு தண்டு வடம் செங்குத்தாகவும், இடுப்பு மெலிந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடை, ஆபரணங்கள் இன்றி இருப்பதால், 10ம் நுாற்றாண்டு சிலை என, தொல்லியல் கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் உதவி கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.