/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 11.26 லட்சம் வாக்காளர்கள்: 23 ஆண்டு கடந்தும் அதே நிலையால் அதிர்ச்சி
/
காஞ்சியில் 11.26 லட்சம் வாக்காளர்கள்: 23 ஆண்டு கடந்தும் அதே நிலையால் அதிர்ச்சி
காஞ்சியில் 11.26 லட்சம் வாக்காளர்கள்: 23 ஆண்டு கடந்தும் அதே நிலையால் அதிர்ச்சி
காஞ்சியில் 11.26 லட்சம் வாக்காளர்கள்: 23 ஆண்டு கடந்தும் அதே நிலையால் அதிர்ச்சி
ADDED : டிச 23, 2025 01:32 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2002ம் ஆண்டில், 11.22 லட்சம் வாக்காளர்கள் இருந்ததை போல், 23 ஆண்டுகள் கடந்து தற்போதும், 11.26 லட்சம் வாக்காளர்களே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்த வாக்காளர்களில், தற்போது 2.74 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளது, கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் 2.74 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாகவும், அதில் அதிகபட்சமாக ஆலந்துார் தொகுதியில், 1.32 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதி களிலும், தற்போது 11.26 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கையை காட்டிலும், 2002ல், நடந்த சிறப்பு தீவிர திருத்த பணியின்போது குறைவான வாக்காளர்களே இருந்திருப்பார்கள் என அரசியல் கட்சியினர் நினைத்திருந்தனர்.
ஆனால் 2002ல் தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கையும், அப்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய 11.26 லட்சம் வாக்காளர்கள் போலவே, 2002ல் 11.22 லட்சம் வாக்காளர்கள் இருந்துள்ளனர். 23 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போதும் அதே நிலை நீடிக்கிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி கூறியாவது:
ஆலந்துார் தொகுதியில் மறுவரை செய்தது, பல்லாவரம் தொகுதியுடன் சேர்த்தது, பிரித்தது போன்ற காரணங்களாலும், இறந்த நபர்கள் பலரையும் நீக்காமல் இருந்த காரணத்தாலும் அப்போது எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இப்போது, ஆய்வு செய்து நீக்கப்பட்டதால் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2002ல் வெளியிடப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையும், இப்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கையும் ஒன்றாக வந்திருப்பது எதிர்பாராத ஒன்று. இதில் வேறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

