/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ அரிசி பறிமுதல்
/
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ அரிசி பறிமுதல்
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ அரிசி பறிமுதல்
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ அரிசி பறிமுதல்
ADDED : டிச 21, 2024 12:45 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கம், ஒலிமுகமதுபேட்டை, கீழம்பி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவது வாடிக்கையாக உள்ளது.
அதேபோல், திம்மசமுத்திரம் பகுதியில் இருந்தும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திம்மசமுத்திரம் பகுதியில் போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.
அதன் அருகிலேயே சரக்கு வேன் ஒன்றும் நின்றிருந்தது. இதையடுத்து, 23 சிப்பங்களில் இருந்த, 1,150 கிலோ ரேஷன் அரிசியையும், சரக்கு வேனையும் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரிசியை அருகில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.