/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறப்பு மருத்துவ முகாம் 1,180 பேர் பங்கேற்பு
/
சிறப்பு மருத்துவ முகாம் 1,180 பேர் பங்கேற்பு
ADDED : நவ 23, 2025 01:45 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், ஆற்பாக்கத்தில்நடந்த சிறப்பு மருத்துவ முகாமில், 1,180 பேர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் ஆற்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்கொடி முன்னிலை வகித்தார். முகாமில், 1,180 பேர் பங்கேற்றனர். இதில், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் செந்தில், காஞ்சிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அருள்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர், பொது மருத்துவம், எலும்பு முறிவு, தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
மேலும், ரத்த பரிசோதனை, உப்பின் அளவு, இ.சி.ஜி., கண், மார்பகம், கருப்பை வாய், வாய் புற்றுநோய் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு, உடனுக்குடன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், சிறப்பு மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.

