/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்படுமா?
/
பழையசீவரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்படுமா?
பழையசீவரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்படுமா?
பழையசீவரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்படுமா?
ADDED : நவ 23, 2025 01:44 AM
வாலாஜாபாத்: பழையசீவரம், சிறிய காலனியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் சிறிய காலனியில், 120 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி குடும்ப அட்டை தாரர்கள், நியாயவிலை கடையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை பெற 2 கி.மீ., துாரத்தில் உள்ள பழையசீவரம் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டி உள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் அ ரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோ மூலமாகவும் ஏற்றி வருகின்றனர்.
அ வ்வாறு வாகன வசதி இல்லாத முதியோர் மற்றும் பெண்கள் ரேஷன் கடைக்கு சென்று உணவுப் பொருட்கள் வாங்கி வர இயலாமல் மிகவும் அவதிபடுகின்றனர்.
மேலும், மழை மற்றும் வெயில் நேரங்களில் ரேஷன் கடைக்கு சென்றுவர அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்ற னர்.
எனவே, பழையசீவரம் சிறிய காலனி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

