நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, 11 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் என, 12 வாகனங்கள் அரசுடைமையாக்கப்பட்டு, அரசிற்கு வருவாய் ஈட்டும் வகையில், ஏப்ரல் 1ம் தேதி, பொது ஏலம் விடப்பட இருப்பதாக, போலீசார் அறிவித்தனர்.
அதன்படி, காஞ்சிபுரம் திருவீதிப்பள்ளம் பகுதியில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 12 வாகனங்களும் பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்டன. இதன்வாயிலாக, 2.41 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.