/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநில யோகா போட்டியில் 12 வயது மாணவன் அசத்தல்
/
மாநில யோகா போட்டியில் 12 வயது மாணவன் அசத்தல்
ADDED : ஜன 14, 2025 12:34 AM

சென்னை, தமிழ்நாடு ஸ்கூல் யோகா சங்கம் மற்றும் ஸ்ரீ சங்கரா யோகா சென்டர் இணைந்து, மாநில அளவிலான 3வது யோகா சாம்பியன்ஷிப் போட்டியை,கரூரில் நடத்தியது.
'ஆன்லைன்' வாயிலாக நடத்தப்பட்ட இப்போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர் - சிறுமியர் தங்களது திறமைகளை, வீடியோவாக எடுத்து அனுப்பினர்.
இதில், பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் வி.தர்ஷன், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், கர்ணபிதாசனம், பரிவர்த்த ஜானு சிர்சாசனம் மற்றும் ஏக பாத ராஜகபோதாசனம் ஆகிய சாசனங்களை சில வினாடிகள் நின்று, மூன்றையும் இரண்டே நிமிடத்தில் செய்து காட்டினார். இவரது திறமை, மாநில போட்டி ஒருங்கிணைப்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்டதோடு, முதலிடத்தையும் பிடித்தது.
முன்னதாக, கோவையில் நடந்த மாநில போட்டியிலும், சீனியர் பிரிவில் தர்ஷன் பங்கேற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

