/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சம்பா பருவத்திற்கு 12,746 விவசாயிகள் 6,108 ஏக்கர் நிலங்களுக்கு பயிர் காப்பீடு

ADDED : டிச 06, 2025 05:33 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், சம்பா பருவத்திற்கு, 12,746 விவசாயிகள், 6,108 ஏக்கர் நிலங்களுக்கு, பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சம்பா, சொர்ணாவரி, நவரை என மூன்று பருவங்களில், நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் சம்பா பருவத்திற்கான விதைப்பு பணிகளை, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் துவக்கி தற்போது அறுவடை செய்ய தயாராகி வருகின்றனர்.
மாவட்டம் முழுதும் 28,492 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். இதற்காக, நவம்பர் 15ம் தேதிக்குள், பயிர் காப்பீடு செய்து கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. அதையடுத்து, நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதில், 12,746 விவசாயிகள், தங்களது 6,108 ஏக்கர் வேளாண் நிலங்களுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பா பருவம் முடிந்த பின், நவரை பருவத்திற்கு 50,000 ஏக்கருக்கு மேலாக நெல் பயிரிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.