/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விடுதியில் மின்கசிவு 13 டூ - வீலர்கள் கருகி நாசம்
/
விடுதியில் மின்கசிவு 13 டூ - வீலர்கள் கருகி நாசம்
ADDED : மார் 11, 2024 04:57 AM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த கழிப்பட்டூரில், 'சோஹோ இன்' என்ற மூன்று மாடிகள் கொண்ட தனியார் தங்கும் விடுதி உள்ளது. நேற்று நள்ளிரவு 1:30 மணிக்கு மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தரைதளத்தில் இருந்து 'லிப்ட்' செல்லும் வழியாக மூன்றவது மாடி வரை தீ பரவியது. இதில், தரைதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 13 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.
சிறுசேரி தீயணைப்பு துறையினர் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் வழியாக, விடுதியில் தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட மென்பொறியாளர்களை பாதுகாப்புடன் மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

